எந்த வேதியல் சேர்மானமும் செய்யாமல் இயற்கையான முறையில் உருவாக்கப் படுவதால், இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் செறிவாகக் கருப்பட்டியில் உள்ளது.
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
காபிக்குசீனிக்குப் பதிலாக கருப்பட்டி இட்டுக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம்.
இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
கால்சியம்அதிகம் உள்ளதால் எலும்புகளை வலிமைப் படுத்தும் ஆற்றல் கருப்பட்டிக்கு உண்டு.
கிராமங்களில் கோழிகளுக்கு கால் முறிந்து விட்டால் கருப்பட்டித் தண்ணீர் வைக்கும் வழக்கம் இன்றும் உண்டு.
சீரகத்தை(Cumin Seeds) வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால்,நன்கு பசி எடுக்கும்.
ஓமத்தை(Oregano) கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை (Gastric Problems) நீங்கும்.
குப்பைமேனிக்கீரையுடன்(Indian Nettle) கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல்(Dry cough), நாள்பட்ட சளித்தொல்லை(Common Cold) நீங்கும்.
இத்தனை நற்பயன்களை கொண்ட கருப்பட்டியை இனியும் நாம் தவிர்க்காமல் நம் வீட்டில் நாள்தோறும் நாமும் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் அருகில் உள்ள அமுது கருப்பட்டி கடைக்கு சென்று சாப்டுலாம்.